உலகத் தாய்மொழி தினம்


20.2.2021, சனிக்கிழமை அன்று 10.30 மணி அளவில்,திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையால்;உலகத் தாய்மொழி தினவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் காயத்ரி அவர்கள் முன்னிலை வகித்து தமிழின் பழமையையும் சிறப்பையும் மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.சிவா அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து‘தாய்மொழியின் சிறப்பு’ குறித்து சிறப்பு உரை ஆற்றினார். தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ஆ.ஜோஸ்பின் செலின் மேரி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து வரவேற்புரை வழங்கினார். வணிகவியல்துறை,உதவிப்பேராசிரியர் திருமதி.ஜிம் லிண்டா அவர்கள் இறுதியாக நன்றியுரை வழங்கினார்.