தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாள் :11.01.2021


11.01.2021 திங்கட்கிழமைஅன்றுகாலை 9.30 மணியளவில் பான் செக்கர்ஸ் மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரியில்,தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாகிராமியப் பாரம்பரியமுறையில் பேராசிரியர்களால் கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் விழாதொடங்கியது.

ஆங்கிலத்துறைப்பேராசிரியர் திருமிகு.வெண்ணிலாஅவர்கள் பொங்கலின் சிறப்புகுறித்தஉரையைநிகழ்த்தினார்.பின்னர் கல்லூரியின் நிர்வாகிஅருட்சகோதரிபார்த்தலேமியோஅவர்கள் பொங்கல் வைக்கும் அனைத்துபொருட்களையும் அர்ச்சிக்கபொங்கல் பொங்குதல் தொடங்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் குலவை இடப்பட்டது.பேராசிரியர்கள் பாரம்பரியகும்மிநடனம் ஆடினர். இறைவனுக்கும் உழவனுக்கும்நன்றிசெலுத்தும் விதமாகபொங்கல் மற்றும் பலவிதகிராமியமரபிலானப் பொருட்களும் வைத்துவழிபாடுசெய்யப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.காயத்ரிஅவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரைவழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஜோஸ்பின் செலின் மேரிஅவர்கள் நிகழ்ச்சிகளைஒருங்கிணைத்தார். வணிகவியல் துறைப் பேராசிரியர் ரசிதாபேகம் அவர்கள் நன்றியுரைவழங்கவிழா இனிதேநிறைவுபெற்றது.